Puttu Maker

Epinay-sur-Seine

ஐரோப்பாவுக்கு வந்த திருமதி சிவானந்தன் வாங்கிய முதல் சமையலறை பொருள் ஒரு புட்டு அவிக்கும் பாத்திரம். புட்டு அவிப்பதற்கு அவர் தனது தாயின் செய்முறையைப் பின்பற்றினாலும்,  தேங்காய் பூ கலந்த வேகவைத்த புட்டு மாவின் சிறிய உருளைகள்  அதே சுவையைக் கொண்டிருக்கவில்லை. உலோக பாத்திரத்தின்  மேல்பகுதியில்தான் பிரச்சினை இருக்கிறது என்பதை உணர்ந்த திருமதி சிவானந்தன், இலங்கைக்கு செல்லும் ஒரு நண்பரிடம் பனையோலையால் செய்த ஒரு நீத்துப்பெட்டி வாங்கிவரும்படி கேட்டார். அந்த நீத்துப்பெட்டியில் அவித்த புட்டில் அவள் சிறு வயதில் சாப்பிட்ட தனது அம்மாவின் புட்டின் சுவையைக் கண்டாள்.

En.
The first kitchen utensil Mrs.Sivananthan bought straight after her arrival in Europe, was a puttu maker. Though she followed her mother's recipe to the letter, her little steamed flour wads with coconut shavings did not have the same flavour. Convinced that the problem was with the upper part of the metal appliance, Mrs.Sivananthan had asked a friend about to leave for Sri Lanka to bring her the traditional palm leaf steam cooking basket. Thus, she got back the aroma of her childhood dish with a composite object, half industrial, half handcrafted, from here and there.

Fr.
Arrivée en Europe, le premier ustensile de cuisine que Mme Sivananthan a acheté est un puttu maker. Bien qu’elle respectât à la lettre la recette de sa mère, ses petites boulettes de farines à la noix de coco cuites à la vapeur n’avait pas la même saveur. Persuadée que le problème venait de la partie supérieure de l’appareil en métal, Mme Sivananthan avait chargé une amie en partance pour Sri Lanka de lui rapporter le traditionnel panier de cuisson en feuille de palmier. C’est grâce à cet objet composite, mi-industriel, mi-artisanal, à la fois d’ici et de là-bas, qu’elle a retrouvé le parfum du plat de son enfance.  

︎︎︎ Menu        Next  ︎