Kerosene Lamp

Geneva

கோடை காலத்தில், கிருத்திகா நண்பர்களை தனது வீட்டு பால்கனியில் இரவு உணவிற்கு அழைப்பாள். அவள் அங்கே ஒரு மேசை, சில நாற்காலிகள் மற்றும் ஒரு பழைய மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி வைப்பாள். உரையாடல்களால் தளர்ந்துபோன அந்த இளம் பெண், சுடர் மினுமினுப்பைப் மணிக்கணக்காய் பார்த்து கொண்டுயிருப்பாள். இந்த ஒளி யாழ்ப்பாணத்தில் முடிவற்ற மின்வெட்டின் போது அவரது பெற்றோர்கள் ஏற்றிய எண்ணெய் விளக்கை அவருக்கு நினைவூட்டுகிறது. சூரியன் மறைந்து, வெப்பம்குறைந்த பின் , அவள் அந்த ஒளியின் கீழ் நீண்ட நேரம் வாசிப்பதில் அல்லது படிப்பதில் செலவழிப்பாள். கிருத்திகா தனது இருளில் மூழ்கிய வீட்டின்  மென்மையான மற்றும் அமைதியான சூழலை ஏக்கத்துடன் நினைப்பாள். அவளைச் சுற்றி போர் மூண்டாலும், அவளது குழந்தைப் பருவநினைவுகள் இனிய நினைவுகள் ஆகும். 

En.
On summer days, Krithika likes inviting her friends to dinner on the balcony of her flat. She sets a table, a few chairs and lights an old kerosene lamp. Lulled by conversations, the young woman can spend long hours watching the flame flicker. Inevitably, this light reminds her of the oil lamp that her parents lit during the endless power cuts in Jaffna. After sunset, when the heat was less suffocating, she would sit under the light and spend a long time reading or studying. Krithika nostalgically remembers the soft and calm atmosphere of her house plunged into darkness. Despite the war raging around her, her childhood memories are the happy ones.

Fr.
Les soirs d’été, Krithika aime inviter ses ami.e.s à dîner sur le balcon de son appartement. Elle y dispose une table, quelques chaises et allume une veille lampe à pétrole. Bercée par les conversations, la jeune femme peut passer des heures entières à regarder la flamme vaciller. Immanquablement, cette lumière lui rappelle la lampe à huile que ses parents allumaient durant les interminables coupures d’électricité à Jaffna. Après le coucher du soleil, quand la chaleur était moins suffocante, elle s’installait sous la lumière et passait de longs moments à lire ou étudier. Krithika se rappelle avec nostalgie l’atmosphère douce et sereine de la maison plongée dans la pénombre. Malgré la guerre qui faisait rage autour d’elle, ses souvenirs d’enfance sont des souvenirs heureux.



︎︎︎ Menu        Next  ︎