Handbag

Epinay-sur-Seine

திருமதி. குலேந்திரன் புங்குடுதீவில் இருந்து படகில் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றபோது, அவரால் ஒரு சிறிய சூட்கேஸையும் கைப்பையையும் மட்டுமே கொண்டு செல்ல முடிந்தது. அவர் தனது புடவைகளுடன் விரும்பி எடுத்துச் சென்ற அழகான கைப்பை, ஐரோப்பாவுக்கான நீண்ட பயணத்தின் போது உயிர்வாழும் ஒரு பொருளாக மாறியது: காகிதங்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள், பயணம் சுமுகமாக செல்வதற்கான அனைத்து முக்கிய தகவல்களும், இந்த சிறிய பையில் அடங்கியுள்ளன. இன்று, அந்த கைப்பை அழகை இழந்துவிட்டது. 92 வயதான திருமதி குலேந்திரன் தனது படுக்கையை விட்டு வெளியேறாமல், தனது பேரக்குழந்தைகளை அடையாளம் காண முடியாமல் தவிக்கிறார். ஆனால், தலையணைக்கு அடியில் பெருமையுடன் பாதுகாத்து வைத்திருக்கும் அந்த பையை அந்த மூதாட்டியிடம்  இருந்து எவராலும் பிரிக்க முடியவில்லை.

En.
When Mrs. Kulendran fled Punkudutivu Island to India aboard a fishing boat, she could only bring a small suitcase and a handbag. Along the long journey, the elegant bag that she loved to wear with her most beautiful saris has become an object of survival: addresses, telephone numbers of contacts in India and Europe vital for the smooth running of the trip, fit in this little bag. Today, the black leather has lost its shine, at 92 years of age, Mrs. Kulendran no longer leaves her room and struggles to recognize her grandchildren, but no one can force her to part with the bag she keeps under her pillow.

Fr.
Lorsque Mme Kulendran a fui l’île de Punkudutivu pour rejoindre l’Inde à bord d’un bateau de pêche, elle n’a pu emporter qu’une petite valise et un sac à main. Au gré du long périple vers l’Europe, l’élégant sac qu’elle aimait porter avec ses plus beaux saris est devenu un objet de survie : papiers, adresses et numéros de téléphone, toutes les informations vitales pour le bon déroulement du voyage, tenaient dans ce petit sac. Aujourd’hui, le cuir à perdu de sa brillance et Mme Kulendran, âgée quatre-vingt-douze ans, ne quitte plus son lit et peine à reconnaître ses petits-enfants. Mais personne ne pourrait contraindre la vieille dame à se séparer du sac qu’elle garde jalousement sous son oreiller.

︎︎︎ Menu        Next  ︎