Curry Powder

Noisy-le-Grand

ஆகாஷ் தனது தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். உயர்நிலைப் பள்ளியிலிருந்து, அவர் எப்போதும் மிக கவனமாக ஆடை அணிவார். அவரது கழுத்துத்தண்டு முதல் காலுறைகள் வரை ஒரே நிறத்தில் மாறாமல் பார்த்துக் கொள்ளுவார். அவர் தனது நண்பர்களுடன் வெளியே செல்லும்போது, கண்ணாடிகளில் தனது பிதிபலிப்பைப் பார்க்க விரும்புகிறார் மற்றும் பெரும்பாலான பாரிஸ் நகர வாசிகளை விட அவர் மிகவும் நேர்த்தியாக இருப்பதைப் பார்க்க விரும்புகிறார். ஆனால் ஒரு விஷயம் அவரைத் தொந்தரவு செய்கிறது: அவரது ஆடைகளில் கறியின் லேசான வாசனை. அவரது தாய் சமைக்கும் போது வீடும் முழுவதும் பரவும் இந்த ஒப்பற்ற வாசனை திரவியம் அவரை எல்லா இடங்களிலும் பின்தொடர்கிறது, இதனால் அவரது பாரம்பரியத்தின் ஒரு பகுதியைக் காட்டிக் கொடுக்கிறது.

En.
Akaash attaches great importance to his appearance. Since high school, he has always been dressing smartly. From the pattern of his scarf to the color of his socks, nothing is left to chance. When he goes out with his friends, he likes to see his reflection in the windows and find that he is more elegant than most Parisians. But one detail bothers him: a slight smell of curry reeked of his clothes. This inimitable scent that spreads in the apartment when his mother cooks follows him everywhere, thus betraying a part of his privacy.
 
Fr.
Akaash attache une grande importance à son apparence. Depuis le lycée, il s’habille toujours avec recherche. Du motif de son écharpe à la couleur de ses chaussettes, rien n’est laissé au hasard. Quand il sort avec ses amis, il aime apercevoir son reflet dans les vitrines et constater qu’il est plus élégant que la plupart des Parisiens. Mais un détail le gêne : une légère odeur de curry imprégnée dans ses vêtements. Cet inimitable parfum qui se répand dans l’appartement lorsque sa mère cuisine le suit partout, trahissant ainsi une part de son intimité.

︎︎︎ Menu        Next  ︎