Wedding Garland
Norsborgகாயத்ரிக்கு 2014-ல் திருமணம் நடந்தது. சுவிட்சர்லாந்தில் தனக்குத் அறிமுகம்மில்லாத கணவனுடன் சேர்ந்து வாழ அவள் தனது குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டு வெளியேறினார். குழந்தைப் பருவத்திலிருந்தே, ஒரு ஆசிரியராக வேண்டும் என்று கனவு கண்டார். இனப்பிரச்சனை காரணமாக ஏற்பட்ட போரின் விளைவால் அவரது ஆசிரியை கனவு நிறவேறவில்லை. அவரது குடும்பம் ஊரை விட்டு கொழும்பு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தலைநகரில் இனவாதம் தீவிரமடைந்ததை எதிர்கொண்ட அந்த இளம் பெண்ணுக்கு பல்கலைக்கழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. எதிர்கால வாய்ப்புகள் இல்லாததால், புலம்பெயர்ந்து வாழும் ஒருவனை திருமணம் செய்து கொள்ள அவர் ஒப்புக்கொண்டார். அவரது கணவர் வேலைக்குச் சென்றபின், தன் குழந்தையுடன், காயத்ரி தனது குடும்பத்தைப் பற்றியும், தனது கைவிடப்பட்ட கனவுகளைப் பற்றியும், வேதனையுடன் நினைக்கின்றார்.
En.
Gayathri got married in 2014. She left her friends and family to Sweden to join a husband she hardly knows. Since her childhood, she had been dreaming of becoming a teacher. The war disrupted her plans. The family was forced to leave their home and move to Colombo. Faced with heightened anti-Tamil racism in the capital, the young woman was refused entry to university. Lacking any prospects for the future, she agreed to marry a man from the diaspora. Alone in the family apartment, when her baby is sleeping and her husband at work, Gayathri thinks about her family and her failed dreams bitterly.
Fr.
Gayathri s’est mariée en 2014. Elle a quitté famille et amis pour rejoindre en Suisse un mari qu’elle ne connaissait pas. Depuis l’enfance, elle rêvait de devenir enseignante. La guerre a bouleversé ses projets. La famille fut contrainte d’abandonner son foyer pour s’installer à Colombo. Confrontée à un racisme anti-tamoul exacerbé dans la capitale, la jeune femme s’est vu refuser l’entrée à l’université. Faute de perspective d’avenir, elle a accepté d’épouser un homme de la diaspora. Seule dans l’appartement familial, quand son bébé dort et que son mari est au travail, Gayathri pense avec amertume à sa famille et à ses rêves avortés.
︎︎︎ Menu Next ︎