Money Transfer Receipt
Parisயாழ்ப்பாணத்தை விட்டுப் புறப்படுவதற்காக பேருந்தில் ஏறிய போது, பிரான்சில் தனது கணவரை மறுபடியும் சந்திக்கும் பயணம் நான்கு வருடங்கள் நீடிக்கும் என்று யுவராணி கற்பனை செய்துகூடப் பார்க்க வில்லை. தென் இந்தியாவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன், பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சுத் தூதரகத்தில் விசாவுக்காகக் காத்திருந்த நிலையில், அவளுடைய கணவர் ஒரு கட்டுமானத் தொழிலாளியாக தனது சம்பளதத்தில் சேமித்து அனுப்பும் பணத்தில் மட்டுமே வாழ வேண்டியிருந்தது. ஒவ்வொரு மாதமும், குழந்தைகளின் உணவு, வாடகை மற்றும் பள்ளிக்கு பணம் செலுத்த, வங்கி மூலம் தனது கணவர் அனுப்பும் பணத்தை அவள் ஆவலுடன் காத்திருந்தாள், சரியான நேரத்தில் வராவிட்டால் தனது தங்க தாலியை விற்க வேண்டியிருக்கும் என்று அஞ்சினாள்.
En.
When she got on the bus to leave Jaffna, Youvaranee had no idea that the trip to find her husband in France would take four years. Stuck with her two children in a small town in southern India waiting for a visa from the French embassy in Pondicherry, she only had to live on the money that her husband managed to save on his salary as a laborer in the building. Each month, she anxiously awaited the money transfer that paid for the children's food, rent and school, fearing that she would have to sell her gold tali if the international transfer did not arrive on time.
Fr.
Quand elle est montée dans le car pour quitter Jaffna, Youvaranee n’imaginait pas que le voyage pour retrouver son mari en France durerait quatre ans. Coincée avec ses deux enfants dans une petite ville du sud de l’Inde à attendre un visa de l’ambassade française de Pondichéry, elle n’avait pour vivre que l’argent que son mari parvenait à économiser sur son salaire d’ouvrier du bâtiment. Chaque mois, elle attendait avec anxiété le transfert d’argent qui lui permettait de payer la nourriture, le loyer et l’école des enfants, craignant de devoir vendre son tali en or si le virement international n’arrivait pas à temps.
︎︎︎ Menu Next ︎